சர்க்கரை நோயினால் வரும் பின்விளைவுகள் - எச்சரிக்கை அவசியம்..!

Thahir
in ஆரோக்கியம்Report this article
நீரிழிவு(சர்க்கரை) நோய் நடுத்தர வயது முதல் முதியவர்கள் வரை பாதிக்கக் கூடிய முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நோயில் இருந்து விடபட பல்வேறு தரப்பினரும் பல மருத்துவ சிகிச்சைகளை முன்னெடுக்கின்றன. நாளுக்கு நாள் உணவு பழக்கம் மாறுபாடுகளால் இந்த நோய் நம் உடலில் இருந்து தோன்றுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் ஏற்பட்டால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும்.குறிப்பாக அடிக்கடி சிறுநீர் கழித்தல்,எப்போதும் பசித்தல்,உடல் சோர்வு,உடல் எடை குறைதல் உள்ளிட்டவை இந்த நோயின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
இதன் பின்விளைவுகள் பற்றி தற்போது பார்க்கலாம்.இந்த நீரிழிவு (சர்க்கரை) நோயை ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும்.
இந்த நோயை கவனிக்காவிட்டால் முக்கியமான உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை பாதித்துவிடும். குறிப்பாக கண் பார்வை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாக தெரியும்.
சிறுநீரகங்கள் சேதமடையலாம் சிறுநீரகங்கள் சேதமடையலாம்.இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்.காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.
உடலுறவில் இயலாமை ஏற்படலாம். மூளைச்சேதமும்,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.