Wednesday, Jul 16, 2025

இந்தியா எந்த நபருக்கும், தனிக்கட்சிக்கும் சொந்தமானது கிடையாது : ராகுல் காந்தி

Indian National Congress Rahul Gandhi
By Irumporai 3 years ago
Report

நாட்டில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ளது. தற்போது தொடர் தோல்விகளால் துவண்டுபோய் விட்ட காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் 3 நாள் அமர்வு மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. இங்கு இரண்டு வகையான இந்தியா உள்ளது.ஒன்று கருத்துகளை பகிரும் இந்தியா, மற்றொன்று .வன்முறையில் ஈடுபட தயாராகும் இந்தியா.

நமது அரசியல் அமைப்பின் படி மாநிலங்களின் தொகுப்பு தான் இந்தியா. அனைத்து தரப்பினா் கருத்துகளையும் கேட்கும் கட்சி காங்கிரஸ்  அதுதான் அதன் டி.என்.ஏ. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இளைஞா் இடம் பெற வேண்டும் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டியது நமது பொறுப்பு.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும். வெகுஜன மக்களுடனான நமது தொடர்பு முறிந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸால்தான் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்