‘Real Life மாற்றான்....’ - ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அரசு வேலை - பஞ்சாப் அரசு கவுரவம்

Conjoined twins Government work
By Nandhini Dec 25, 2021 10:54 AM GMT
Report

சூர்யாவின் மாற்றான் படத்தில் இருக்கும் இரட்டையர் போலவே நிஜ வாழ்விலும் இரட்டையர்கள் வாழ்ந்து சாதித்து வருகின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி டெல்லி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை தான் அந்த இரட்டையர்கள். நான்கு கைகள், இரண்டு கால்கள், இரண்டு இதயம் கொண்டு அந்த இரட்டையர்கள் ஒட்டி பிறந்துள்ளனர்.

பிறந்த உடனேயே இவருடைய பெற்றோர்கள் இவர்களை அனாதையாக விட்டுச் சென்றுவிட்டனர். பின் இந்த குழந்தைகளின் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அங்கு அவர்களை தனியாக பிரித்தால் ஏதேனும் ஒரு உயிருக்கு ஆபத்து இருக்கு என்று ஒரு அறிவித்தார்கள்.

இதனையடுத்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வில்லை. மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் தான் இவர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது.

அதாவது 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமிர்தசரசில் உள்ள பிங்கள்வாரா என்ற அறக்கட்டளை இந்த இரட்டையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. பின் அந்த அறக்கட்டளையில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை அன்போடு அரவணைத்து வந்தார்கள்.

பல இன்னல்களை கடந்து இந்த ஒட்டி பிறந்த இரட்டையர்கள் எலக்ட்ரீசியன் படிப்பில் டிப்ளமோ பிறந்த செய்திருக்கிறார்கள். பின் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து வந்தனர்.

அப்போது தான் இவர்கள் வாழ்வில் ஒரு அதிசியம் நடந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அதிகாரி இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு விசாரித்தார்.

பின் இவர்கள் மிக திறமையான எலெக்ட்ரிசியன்கள் என்பதை அறிந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீடு அடிப்படையில் இவர்களுக்கு அரசு வேலை வழங்கினார்.

மேலும், இவர்களின் தொழில் நுட்பம் தங்களை வியக்க வைத்தது என்று அங்கிருக்கும் அரசு அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

பின் இந்த ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பஞ்சாப் இந்த அரசின் இந்த அறிவிப்பு தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிக்கு கௌரவப்படுத்தியது உள்ளதாகவும், நேர்மையாகவும் முழு அர்ப்பணிப்புடனும் தாங்கள் பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

மேலும், தங்களை சொந்த காலில் நிக்க வாய்த்த பிங்கல்வாரா அறக்கட்டளைக்கு நன்றி என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். 

‘Real Life மாற்றான்....’ - ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அரசு வேலை - பஞ்சாப் அரசு கவுரவம் | Conjoined Twins Government Work

‘Real Life மாற்றான்....’ - ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு அரசு வேலை - பஞ்சாப் அரசு கவுரவம் | Conjoined Twins Government Work