உதவி ஆய்வாளரை மிரட்டும் காங்கிரஸ் பிரமுகர்- வைரலாகும் வீடியோ!
By Irumporai
சென்னையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்த உதவி ஆய்வாளரை மிரட்டும் காங்கிரசு பிரமுகர் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜா என்பவர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார்.
அப்பொழுது ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த நபரை பிடித்து சோதனை செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த காங்கிரசு பிரமுகர் பிரபா உதவி ஆய்வாளரை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
.