பரபரப்பான சூழலில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : காணொலிக்காட்சி வழியாக சோனியா பங்கேற்பு
காங்கிரஸில் முக்கிய தலைவர்கள் வெளியேறிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் காணொலிக்காட்சி மூலம் சோனியா கலந்துகொள்கிறார் என கூறப்படுகிறது
காங்கிரஸ்
நாட்டின் பெரிய கட்சியில் முக்கியமானதாக கூறப்பட்ட காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது.

கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகி வருகின்றனர். ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கபில் சிபல், அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங், ஹர்திக் படேல், ஜித்தின் பிரசாதா, ஜெய்வீர் ஷெர்கில் என பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறி உள்ளனர்.
குலாம் நபி ஆசாத் விலகல்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியதும் இது அந்தக் கட்சியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
காணொலி மூலமாக சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவருடன் ராகுலும், பிரியங்காவும் சென்றுள்ளனர். குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி அவர்கள் நேரடியாக எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடாத நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
இதில் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன .

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைபயணம் நடத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil
சரிகமப : இறுதி சுற்று போட்டியாளராக தேர்வான ஷிவானியின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள் Manithan