தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பது இல்லை - ப.சிதம்பரம்
கொரானா பெரும் தொந்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய அரசு கையாண்ட விதத்தை பார்த்து தங்களுக்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணரத்தொடங்கிவிட்டனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் ஆட்சியில் பங்கேற்பது இல்லை என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக, நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. அவர்களக்கு வாக்களித்தவர்களை அடையாளம் கண்டு தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியில் இழுப்பதற்கு தான் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
வட மாநிலத்தில் பாஜகவிற்கு வாக்களித்த மக்கள் சாரை சாரையாக உயிரிழந்து வருவதாக வேதனை தெரிவித்தார். உத்திரபிரதேசத்தில் ஏற்படும் மரணங்கள் மறைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
கொரானா பெரும் தொந்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய அரசு கையாண்ட விதத்தை பார்த்து தங்களுக்கு உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணரத்தொடங்கிவிட்டனர் என்றார். டில்லியில் போராடும் விவசாயிகள் எளிதல் போரட்டத்தை முடித்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.