திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்.
மார்ச் 16ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
இதற்கு முன்னதாக திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய இன்று கெடு விதித்தது திமுக.

ஆனால் காங்கிரஸ் தன்னுடைய முடிவில் கறார் காட்டுவதால் இழுபறி நீடிக்கிறது. மேலும் கூட்டணியிலிருந்து வெளியேற காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோருடன் காணொலி வாயிலாக ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார், காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் கேட்பதாகவும், திமுக 28 வரை தர சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
