நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை!

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam K. Selvaperunthagai
By Jiyath Jul 03, 2024 12:48 PM GMT
Report

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.  

நீட் தேர்வு 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நீட் தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்து பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் "நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை! | Congress Welcomes Vijays Comments On Neet

ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி.

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

செல்வப்பெருந்தகை 

நிரந்தர தீர்வாக பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும்" என்றார்.

நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது - செல்வப்பெருந்தகை! | Congress Welcomes Vijays Comments On Neet

இந்நிலையில் விஜய்யின் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் "மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும் பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.