விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்

Vijay Indian National Congress Vaiko
By Karthikraja Aug 31, 2026 11:26 AM GMT
Report

congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.

விஜய் பிரதமர் வேட்பாளர்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது. 

விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ் | Congress Warn Exit From Tvk Ministry If Vijay Pm

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார். 

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எச்சரிக்கை

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். 

விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ் | Congress Warn Exit From Tvk Ministry If Vijay Pm

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது. 

விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ் | Congress Warn Exit From Tvk Ministry If Vijay Pm

அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது. இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்.

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.