காங்கிரஸிற்கு தமிழக தேர்தல் ரொம்ப முக்கியம் அட்வைஸ் கொடுக்கும் சிதம்பரம்
காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஆனால் ,திமுக மிக மிகக் குறைவான தொகுதிகளையே காங்கிரஸிற்கு கொடுத்துள்ளது.
இதனால் நம்மை சரியாகவும் நடத்தவில்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்ணீர் வடித்தது பரவலாக பேசபட்டது. மிகவும் விரக்தியுடன் இருக்கும் காங்கிரஸ் மக்கள் நீதி மய்யம் பக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிது. இந்த நிலையில் காங்கிரசை அழிவில் இருந்து பாதுகாக்க இந்த தேர்தல் முக்கியமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரசின் இடத்தை பிடித்து விடும் ,நாம் எதிலும் தவறான யுக்தியை கையாளக் கூடாது.
காங்கிரசின் தவறான யுக்திகளால் பாஜக கைக்கு கர்நாடகம் சென்று விட்டது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.