ட்விட்டரில் ராகுல் போட்டோவை வைக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் காரணம் என்ன?

congress Rahul Gandhi twitterlocked
By Irumporai Aug 12, 2021 10:55 PM GMT
Report

தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவு காரணமாக 9 வயது தலித் சிறுமி உயிரிழந்தார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும், ஆறுதல் கூறிய புகைப்படத்தை தனது டுவிட்டரிலும் பதிவிட்ட நிலையில் அந்த போஸ்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதுடன், ராகுல் காந்தியில் கணக்கை முடக்கி வைத்தது ட்விட்டரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தை பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்களான மாணிக்கம் தாகூர், ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மேக்கான் ஆகியோரின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றிய அரசினையும் ட்விட்டரினையும் எதிர்க்கும் வகையில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்கள், தங்கள் ட்விட்டர் கணக்கில், ராகுல் காந்தி என பெயரையும் ராகுல் போட்டோவையும் மாற்றம் செய்து வருகின்றனர்.