2029ல் விஜய் தான் பிரதமர்: காங்கிரஸ் எதிர்ப்பு
2026ம் ஆண்டு ஜோசப் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்த ராகுல்காந்தியே 2029ம் ஆண்டு கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார் என தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் அடுத்த பிரதமர் என அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூறிவருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், 2029ல் பிரதமர் யார் என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும், எங்கள் தலைவர் தான் பிரதமர் ஆவார்.
ராகுல்காந்தியே அவரது கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், தவெக எம்எல்ஏக்கள் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசுவதாகவும், ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாகவும் கூறியுளளார்.