நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Indian National Congress India Election
By Jiyath Mar 12, 2024 02:52 PM GMT
Report

நாடாளுமனற தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்! | Congress Released List Candidates For 2Nd Phase

இதனிடையே கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் 39 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நாடாளுமனற தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் 

இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சீ.வேணுகோபால் வெளியிட்டார். அதில் அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்! | Congress Released List Candidates For 2Nd Phase

அசோக் கெலாட்டின் மகன் வைபர் கெலாட் ஜல்லூர் (ராஜஸ்தான்) தொகுதியிலும், கமல்நாத் மகன் நகுல் நாத் சிந்த்வாரா (மத்திய பிரதேசம்) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.