பால்கோட் தாக்குதல் அர்னாப்புக்கு எப்படி தெரியும்? ராகுல் காந்தி கேள்வி

political admk dmk bjp
By Jon Jan 25, 2021 04:23 PM GMT
Report

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்; திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்கிறது என அரவக்குறிச்சியில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கபட்டிருந்தது.

அதன்படி, ராகுல்காந்தி எம்.பி. நேற்று முன்தினம் கோவையில் பிரச்சாரத்தைதொடங்கிய அவர் , 3-ம் நாளான இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அரவக்குறிச்சி பகுதியில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில் நல்லாட்சி அமைத்துத் தருவது எனது கடமை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என கூறினார்.

மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நல்லுறவு தொடர்வதாக கூறிய ராகுல் பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் புகுத்த முயற்சிப்பதாகவும் அதை தடுக்கவே தான் வந்ததாகவும் , தமிழ்நாட்டிலிருந்து ஆர்எஸ்எஸ்-ஐ துடைத்து எரிய வேண்டும் என கூறினார்.

தமிழ்நாட்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்வதாக மோடி கூறினார். இவ்வாறு பேசிய ராகுல் காந்தி,பால்கோட் தாக்குதல் பற்றி ஒரு செய்தியாளருக்கு தெரிவித்தது யார்?பிரதமர், ராணுவ அமைச்சருக்கு்தெரிந்தது அர்னாபுக்கு எப்படி தெரிந்தது? என கேள்வி எழுப்பினார்.