திமுக கூட்டணியைவிட்டு வெளியேறி காங்கிரஸ் பலப்பரீட்சை?
ராகுல் காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் காங்கிரஸ் கட்சி அதிருப்தியுடன் உள்ளது. 40க்கும் குறைவான தொகுதிகளை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த காங்கிரஸ்க்கு, 15 முதல் 18 வரை மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க கூறியுள்ளது.
எனவே தி.மு.கவின் பிடிவாதம் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ”மறுபரீசலனை செய்யலாம்” என்ற முடிவை எட்டியுள்ளது. இதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 12 இடங்கள் வரை கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க வெறும் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சு வார்தையின் போதும் தி.மு.க பிடிவாதம் காட்டியதால் பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேறியுள்ளது.
இதனால் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்தையில் இழுபறி நீடிப்பதோடு, கட்சிகள் கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்தியின் கடந்த மூன்று நாட்கள் பிரச்சாரங்களில் தி.மு.க குறித்தோ! கூட்டணி குறித்தோ! பேசாதது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.