காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி - ட்விட்டரில் தகவல்!

Indian National Congress Sonia Gandhi
By Swetha Subash Jun 03, 2022 05:59 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. எனினும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி - ட்விட்டரில் தகவல்! | Congress Priyanka Gandhi Tests Covid Positive

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்துவந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 2 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,712 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4,041 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,68,585 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, "லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.