5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி : நாளை கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

congresslost congresspartymeeting electionresults
By Swetha Subash Mar 12, 2022 11:10 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில்,

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று அரியணை ஏறுகிறது.

அதேபோல், பாஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை பதிவு செய்தது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறாமல் கடும பின்னடைவை சந்தித்துள்ளது.

5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி : நாளை கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் | Congress Party Meeting To Be Held Tomorrow

இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது. நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் 5 மாநில தேர்தலில் தோல்வி ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.