முகக்கவசம் கொடுத்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியினர்
மக்களுக்கு முகக்கவசம் கொடுத்து நூதன முறையில் வாகு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தற்பொழுது தேர்தல் களத்தில் அனல் பறக்க செயல்பட்டு வருகின்றனர். மேலும் நூதன முறையில் ஒவ்வொருவரும் மக்களிடையே நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நகைக்கடை பஜாரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கும், கடைகளில் உள்ளவர்களுக்கும் முகக்கவசம் கொடுத்து தி.மு.க., வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக காங்., கட்சியினர் ஓட்டு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் ராமநாதபுரம் நகைக்கடை பஜாரில் ஓட்டு சேகரித்தனர்.
அப்போது தாம்பூல தட்டில் சந்தனம், குங்குமம், வெற்றிலை, பாக்கு, துண்டு பிரசுரங்களுடன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கி ஓட்டு சேகரித்தனர். மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், நாகராஜ், வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.