அனைத்தையும் தொலைத்த காங்கரஸ் என்ன செய்ய போகிறது?

congress nationalparties congressnextmove
By Swetha Subash Mar 18, 2022 12:08 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாகவும் மூத்த கட்சியாகவும் இருக்கும் இந்திய காங்கிரஸ் தேசிய அளவில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணம் என்னவாக இருக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு தொகுப்பை காணலாம்.

காங்கிரஸ் கட்சியை இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய சுதந்திரத்திற்கு பின் என பிரித்து பேசலாம் அந்த அளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ந்த கட்சியாக இருந்தது.

காங்கிரஸில் இருந்து இந்திய பிரதமர்கள் பலர் வந்திருந்த போதிலும் தற்போதைய நிலை மிக மோசமாக உள்ளது.

இதற்கு நேருவின் குடும்ப அரசியல் தான் என்ற கருத்து ஒரு புறமும், ஒட்டு மொத்த காங்கிரஸ் பிளவுகளைக் கொண்டே மாநிலங்கள் தோறும் உள்ளதும் என்ற பேச்சுக்கு இடையே உத்திரபிரதேசம்,

பஞ்சாப் , கோவா மணிப்பூர், உத்திரகாண்ட் ஆகிய 5மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பிறகு காங்கிரஸின் எதிர்பார்ப்புகளுமே தோல்வியைத் தழுவியது.

காங்கிரஸின் வீழ்ச்சி என்பது 1967இல் தமிழகத்தில் ஆரம்பம் ஆனது. 90களில் உத்திரப்பிரதேசத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

காங்கிரஸ் கோட்டை என சொல்லப்பட்ட உத்திர பிரதேசத்தில் இருந்துதான் ஜவஹர்லால் நேரு, முதல் 7பிரதமர்களை காங்கிரஸ் மூலம் உருவானார்கள்.. அங்கே மாயவதி ஆட்சியைப் பிடித்து காங்கிரஸை காணாமல் ஆக்கினார் வரலாற்றில் இருந்து.

அதன் பின் தற்போது பாஜக காங்கிரஸின் சுவடுகளை களையெடுக்க துவங்கி உள்ளது. அதே போல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த திரிணாமூல் காங்கிரஸ் கூட காங்கிரஸை கதற வைத்தது என்றே சொல்லலாம்.

கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியை எதிர்கொண்டு இருக்கும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போதுதான் கர்நாடகா, புதுச்சேரி , மத்திய பிரதேசங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது.

அப்படித்தான் இந்த 5சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் பலத்த தோல்வியைப் பெற்று உள்ளது. உத்திரபிரதேசம் , உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

கடந்த 2017 தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் 20 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த ஆம்ஆத்மி கட்சி, இந்தத் தேர்தலில் 92 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

காங்கிரஸ் கட்சியால் வெறும் 18 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக காங்கிரஸ் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.

இந்த படுதோல்வியால் இந்திய அளவில் காங்கிரஸ் ஆளும் மாநிலம் இரண்டு என்ற எண்ணிக்கயை அடைந்தது. தேர்தல் தோல்விகுறித்து விவாதிக்க கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூடியது.

அதில் காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் ராகும் தலைவராக வேண்டும் என்ற கோஷமும் ஒலித்தது.

இந்த சூழலில் தேர்தல் தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறிய போது கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் மத்தியில் ஒரு முடிவெடுத்து வெளியிட்டது காங்கிரஸ் தலைமை.

கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறுசோனியா காந்தி அறிவுறுத்தியுள்ள தாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ராயா, உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் லோக்கேன் சிங்,

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்சித்து ஆகியோர் ராஜினாமா செய்ய தலைமை உத்தரவு என்பதால் மீற முடியாது.

இப்படி தோல்விகளை சந்திக்கும் போதெல்லாம் உடனடியாக ஒரு கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தி, முடிவும் எடுக்கப்படும் ஆனால் அந்த முடிவுகள் செயல்படாமல் கூட போனது உண்டு.