ஒரு தேங்காய் உடைத்தது குற்றமா sir.. வைரலாகும் காங்கிரஸ் எம்.பி மீம்ஸ்.. காரணம் என்ன ?

shashitharoor congressmp memesviral
By Irumporai Aug 26, 2021 06:05 AM GMT
Report

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஓணம் பண்டிகையின்போது, கோவிலில் தேங்காய் உடைத்த விஷயம்தான் இப்போது நாடு முழுக்க வைரலாகிவருகிறது.

தேங்காய் உடைப்பது என்பது இந்துக்கள் வழிபாட்டு முறையின் ஒரு அங்கம் இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஓணம் பண்டிகையின் போது ஒரு கையில் தேங்காயை வைத்துக் கொண்டு ஓங்கி, இன்னொரு கை அதே நேரம் பூமியை பார்க்கும் வகையில் இருந்ததால் நடனம் ஆடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படம் நெட்டிசன்கள் பக்கம் செல்லவே தங்கள் வேலையினை காட்டத்தொடங்கினர் வ்ழக்கம் போல் வித்தியாசமாக யோசித்து மீம் போடத் தொடங்கிவிட்டனர். இதை சசிதரூர் கூட ரசிக்கிறார்.

அவரே தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் சுவாரசிய மீம்ஸ்களை ஷேர் செய்துள்ளார். முதல் படத்தில் சசி தரூர் தேங்காய் உடைக்கும் காட்சி அடுத்தடுத்த படங்களில் தேங்காய்க்கு பதில், டீ ஆற்றும் கோப்பை, தேங்காயை எடுத்துவிட்டு பரதம் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளன.

ஒரு தேங்காய் உடைத்தது குற்றமா sir.. வைரலாகும்  காங்கிரஸ் எம்.பி மீம்ஸ்..  காரணம் என்ன ? | Congress Mp Memes Viral Shashi Tharoor Viral

மல்யுத்தத்தில் குத்தும்போது இப்படித்தானே கையை ஓங்குவார்கள் என்று சித்தரிக்கும் அளவுக்கு போய் விட்டன மீம்ஸ்கள். தேங்காய்க்கு பதில், பந்தை கையில் கொடுத்தால், ஓஹோ.. ரன் அவுட் வாய்ப்புக்கு வாய்ப்பு இருக்கே. இதுதான் இந்த மீம் என ஷேர் செய்துள்ளார்.