24 மணிநேரமாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் , அதிகாரிகளை அலறவிட்ட எம்.பி ஜோதிமணி!

protest mp jothimani congressmp
By Irumporai Nov 26, 2021 08:26 AM GMT
Report

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் செய்யும் ADIP திட்டம், பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் மூலம் முகாம் நடத்தி நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் மற்ரும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது . ஆனால் கரூர் கரூர் மாவட்டத்தில் இந்த திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. இதற்கு மாவட்ட ஆட்சியர் தான் காரணம் எனவும் திட்டமிட்டே கமிஷன் எதிர்பார்த்து ஆட்சியர் இந்த திட்டத்தினை செயல்படுத்தவில்லை எனவும் கரூர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து , அந்த பட்டியலை கொடுத்து ஆட்சியர் ADIP திட்டத்தை செயல்படுத்த முன்வரவில்லை எனக்கூறி நேற்று ஜோதிமணி , ஆட்சியர் அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

 ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னை மக்கள் பணி செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தடுப்பதாக கூறிய ஜோதிமணி, கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று இரவு கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பே படுத்து உறங்கிய ஜோதிமணி இன்று 2-வது நாளாக தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த நிலையில்  லேப்டாப் வைத்து போராட்ட களத்திலேயே அவர் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

24 மணிநேரமாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டம் , அதிகாரிகளை அலறவிட்ட  எம்.பி  ஜோதிமணி! | Congress Mp Jothimani Protest End

இந்த நிலையில் ,கரூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து 2வது நாளாக ஜோதிமணி எம்.பி உள்ளிருப்பு போராட்டம் - மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளதால் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

உத்தரவாதம் கொடுத்தது போல் மாற்றுத்திறனாளிகள் முகாமை மாவட்ட நிர்வாகம் நடத்தவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவேன் எனவும் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.