நடிகை ஜான்வி கபூரை காரைக்குடிக்கு அழைத்த கார்த்தி சிதம்பரம் - ஏன் தெரியுமா ?
நடிகை ஜான்வி கபூர் அம்பேத்கர் மற்றும் காந்தி என இரு தலைவர்களைப் பற்றி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்தது.
ஜான்வி கபூர்:
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் முத்த மகள் ஜான்வி கபூர். இவர் தமிழ் , இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா படத்தில் நடிகை ஜான்வி நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் போட்டோஷூட் , இண்டர்வீயூ ,என தன்னை பிஸியாக வைத்துக்கொள்ள கூடியவர். அண்மையில் , நடிகை ஜான்வி கபூர் அம்பேத்கர் மற்றும் காந்தி என இரு தலைவர்களைப் பற்றி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்தது.
என்ன தான் ஜான்வி கபூர் பாலிவுட் நடிகையாக கருதப்பட்டாலும் தனது அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் பழக்கவழக்கங்கள் மீதும் நிறைய மதிப்பு வைத்திருப்பவர் நடிகை ஜான்வி கபூர்.
எம்.பி கார்த்தி சிதம்பரம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த ஜான்வி கபூர் தனக்கு பிடித்தமான உணவு இட்லியும் கறி குழம்பும் தான் தனக்கு பிடித்தமான காம்போ என்றும்இது தனது தந்தைக்கும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
Come to Karaikudi, will serve you the most delicious Idly, Kari Kolumbu, Chicken Vella Kurma, Fish Curry & Paya. Will go well with Dosai & Appam too. (It's a stereotypical myth that South Indians are vegetarians) pic.twitter.com/9Q1hkDsi3t
— Karti P Chidambaram (@KartiPC) July 27, 2024
இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , “ ஒருமுறை காரைக்குட்டி வாங்க. இட்லி ,கறிக்குழம்பு , வெள்ள கறி குருமா , மீன் குழம்பு, பாயா என எல்லாம் சாப்பிட்டலாம் “ என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது