சட்டப்பேரவையில் எதிர்ப்பு பதாகைகளுடன் நுழைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் : அனுமதி மறுப்பால் பரபரப்பு

Nationalist Congress Party Rahul Gandhi
By Irumporai Mar 27, 2023 07:06 AM GMT
Report

பாஜகவுக்கு எதிராக, எதிர்ப்பு பதாகைகளுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

மோடி குறித்த சர்ச்சை பேச்சினால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியினை இழந்துள்ளனர், அதோடு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கருப்பு சட்டை போராட்டம்  

காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை காட்ட இன்று நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

சட்டப்பேரவையில் எதிர்ப்பு பதாகைகளுடன் நுழைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் : அனுமதி மறுப்பால் பரபரப்பு | Congress Mlas Tamil Nadu Assembly Black Dress

மேலும், அதே போல காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல, ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்திஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு  

இன்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்படவும் உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்து உள்ளனர். இதக்ரு முன்னதாக சட்டப்பேரவைக்குள் பதாகைகளுடன் நுழைய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவையில் எதிர்ப்பு பதாகைகளுடன் நுழைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் : அனுமதி மறுப்பால் பரபரப்பு | Congress Mlas Tamil Nadu Assembly Black Dress