கேள்வி கேட்ட இளைஞரை கண்ணத்தில் அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ - அதிர்ச்சி வீடியோ

Punjab congress mla congress mla joginder joginder
By Anupriyamkumaresan Oct 21, 2021 06:00 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

பஞ்சாபில் நடைபெற்ற பொதுக்ககூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட எம்எல்ஏவிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய இளைஞரை அந்த எம்எல்ஏ சரமாரியாக அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தல் முதலமைச்சர் பிரச்சனை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், அடுத்த பிரச்சனை ஒன்று தலை தூக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஜிந்தர் பால் பங்கேற்றார்.

கேள்வி கேட்ட இளைஞரை கண்ணத்தில் அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ - அதிர்ச்சி வீடியோ | Congress Mla Who Slap Young Man In Meeting

பின்னர் தொகுதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தொகுதிக்கு உண்மையா நீங்கள் என்ன செய்யீதர்கள் என கேள்வி எழுப்பினார்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இளைஞரை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஆக்ரோஷத்துடன் எம்எல்ஏ பார்த்து தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, இளைஞரின் கன்னத்தில் பலார் என அறைந்தார். மேலும் அந்த இளைஞரை எம்.எல்.ஏவும் காவலர்களும் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.