காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்!
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய லட்சுமி நாராயணன், புதன்கிழமை என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு கடந்த வாரம் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நட்டத இருந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரான லட்சுமி நாராயணன் திடீரென்று ஞாயிற்றுக்கிழமை பதவியை ராஜிநாமா செய்தார்.
இதன்காரணமாக நாராயணசாமியின் அரசு கவிழ்வது உறுதியானது. பின்னர் திங்கள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று, நாராயணசாமி தனது பதவியினை ராஜிநாமா செய்தார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட லட்சுமி நாராயணன், புதுச்சேரியில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர்.காங்கிரசில் இணைந்துள்ளார்.