காங்கிரஸ் கட்சி பின்னடைவு : வைரலாகும் வீடியோ, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

congressloses 5stateassemblyelections
By Swetha Subash Mar 10, 2022 06:45 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பின்னடைவு : வைரலாகும் வீடியோ, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Congress Loses In 5 State Assembly Elections

இந்நிலையில், உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல், பாஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லாமல் கடும பின்னடைவை சந்தித்துள்ளது.

இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வியை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட முன்னிலை வகிக்காததை குறிக்கும் வகையில்,

ஒரு அறையில் அக்கட்சியின் சின்னத்தை தரையில் வரையப்பட்டிருப்பதை துடைப்பம் கொண்டு அகற்றுவதை போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.