ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு - லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 42% சதவீதத்தில் இருந்து 49% சதவீத வாக்குகள் வாங்க வாய்ப்பு இருப்பதாக லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருந்த ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் 6 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லயோல கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக கள ஆய்வு நடத்தினர்.
காங்கிரஸ் கட்சி ஆதரவு அதிகம்
அதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 42% சதவீதத்தில் இருந்து 49% சதவீத வாக்குகள் வாங்க வாய்ப்பு இருப்பதாகவும்,
அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 31% சதவீதத்தில் இருந்து 36% சதவீத வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 6.90% சதவீதத்தில் இருந்து 10 சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தேமுதி, நோட்டா, மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்கள் 5.58% சதவீத வாக்குகள் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் 76.58% சதவீதத்தில் இருந்து 85% சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி,அண்ணாமலை, சீமான் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த ஆய்வில் 50 பேர் ஈடுபட்டதாகவும் அதில் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.