காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? : ராகுல்காந்தி எம்.பி. பதில்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Sep 09, 2022 09:38 AM GMT
Report

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்லுக்கு பின்னரே தெரியவரும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, இன்று 3-வது நாளாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். புலியூர்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மக்களின் எதிர்பார்ப்பை அறிந்துகொள்ளவே நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? : ராகுல்காந்தி எம்.பி. பதில் | Congress Leader Rahul Gandhi Mp Answer

சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பாஜக கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் பன்முக தன்மையை மாற்ற பாஜக முயல்வதாகவும் விமர்சித்தார்

தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்

 நடைபயணத்தில் காங்கிரசார் மட்டுமின்றி, பொதுமக்களும் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் யார் என்பது உள்கட்சி தேர்தலுக்கு பின்னர் தெரியவரும் என தெரிவித்த அவர், இந்தியாவின் ஒற்றுமைக்காகவே இந்த நடைபயணம் என்றார். இந்த நடைபயணம் குறித்த விமர்சனத்தை தான் வரவேற்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.