தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் காங்கிரஸ்
தமிழகத்தில் போட்டியிடும் 25 தொகுதிகளிலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், அப்போது பிரசாரத்தில் தீவிரம் காட்டவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் இந்த முறை போட்டியிடும் 25 தொகுதிகளிலும் வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரிக்க காங்கிரசில் தனிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளுக்கும் தலா 2 சிறந்த பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ய தனி தொழில்நுட்ப குழு செயல்பட்டு வருகிறது.