‘’தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளரவே வளராது" - கொந்தளித்த கார்த்தி சிதம்பரம்

tamilnadu congress karthichidambaram
By Irumporai Jan 01, 2022 08:17 AM GMT
Report

தமிழ்நாட்டில் சம்பிரதாய அரசியல் செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி இங்கு வளராது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ கர்நாடகாவில் நடந்த நகர்ப்புற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்துள்ளது.

2023ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அடுத்த 30 ஆண்டுகளு இந்திய அரசியலுக்கு மையமாக பாஜகதான் திகழும் என பிரசாந்த் கிஷோர் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகளும், பெண்களும் ஆளாவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாமியாராக வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை அனைத்து மதங்களிலும் அளிக்க வேண்டும்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சவாலும், கட்சிக்குள்ளேயே நிலவும் போட்டியும் இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் கட்டுமானம் வலிமையாக இல்லை.

ஆகவே, சம்பிரதாய அரசியல் செய்துகொண்டிருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையாது என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்

இருப்பினும் தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு கொடுப்போம் என பிரியங்கா எடுத்திருக்கும் முயற்சிக்கு எதிர்காலத்தில் பலன் கிடைக்கும். தமிழ்நாட்டில் சம்பிரதாய சடங்கு அரசியலை செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையாது. மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு புதிய சிந்தனை வேண்டும். அதிமுக ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ஒரு முன்னாள் அமைச்சரை காவல்துறை இன்னும் தேடுவது வியப்பாக இருக்கிறது” என்றார்