தவெக உடன் கூட்டணியா? செக் வைத்த டெல்லி காங்கிரஸ் தலைமை
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
தேர்தல் கூட்டணி
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தற்போதையை அரசியல் சூழலை பொருத்தவரை, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என கடந்த பல தேர்தல்களை காங்கிரஸ் மற்றும் திமுக ஒரே கூட்டணியில் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்கும் விதமாக. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குழு அமைத்த காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) November 22, 2025
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய… pic.twitter.com/ew6hGSee9K
கூட்டணியில், எத்தனை தொகுதிகள் பெறுவது, எந்த தொகுதிகள் பெறுவது என்பதற்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் இந்த குழு கலந்து கொள்ளும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், "தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) November 22, 2025
'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது
அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த…
'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.