குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500 - வாரி வழங்கும் காங்கிரஸ்!
மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கை
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளாவுக்கு அம்மாநில தலைவர் பதவியை காங்கிரஸ் கொடுத்துள்ளது. இவர் தனது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
இந்நிலையில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஷர்மிளா வெளியிட்டார். அதில், 9 முக்கிய உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
உத்தரவாதங்கள்
ஆந்திராவில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம், ரூ. 8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2000 வழங்கப்படும். இந்த பணம் குடும்பத் தலைவிகளிடம் தரப்படும். வீடற்ற ஏழைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தரப்படும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்படும். கேஜி முதல் பிஜி வரை, அதாவது மழலையர் வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.