திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதியானது.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நாளை மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கோரி வந்தது. ஆனால் 20 தொகுதிகளுக்கு மேல் வழங்கும் முடிவில் திமுக இல்லை எனச் சொல்லப்பட்டது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. தற்போது காங்கிரஸ் உடன் திமுக ஒரு உடன்படிக்கை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
27 இடங்களுக்கு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாகவும் திமுக 22 இடங்களுக்கு ஏறி வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சரியான எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு நாளைக்குள் திமுக உடன் காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.