புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை

dmk congress pondicherry
By Jon Mar 07, 2021 04:01 PM GMT
Report

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி.வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், திமுக சார்பில் எம்எல்ஏ சிவா, சிவக்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் பேசிய நாராயணசாமி, முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சில கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும், கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும், என்.ஆர்.காங்கிரசுக்கு திமுக அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்க நாராயணசாமி மறுத்துவிட்டார்.