மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்
மாநிலங்களவை தேர்தலுக்கான தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைக்கு தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டுடன் இன்னும் பிற மாநிலங்களில் சேர்த்து 37 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 6 இடங்களில் 4 திமுக-வுக்கும், 2 இடங்கள் அதிமுக-வுக்கும் கிடைக்கும்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது, திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.