5 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக நேரடிப் போட்டி: சூடாகும் தேர்தல் களம்
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் குறித்த பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதன்படி கோவை தெற்கு, விளவங்கோடு, காரைக்குடி, குளச்சல் மற்றும் உதகை ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக தேர்தலை சந்திக்கின்றன. ஆதேபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
15 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடிப் போட்டி
பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை
3 தொகுதிகளில் காங்கிரஸ் - பாமக நேரடிப் போட்டி
சோளிங்கர், விருத்தாசலம், மயிலாடுதுறை