காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த பாஜக - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி அமைத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் உடன் கூட்டணி
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முதலே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே உரசல் எழுந்தது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் மக்களவை தொகுதிக்குட்பட்ட அம்பர்நாத் நகராட்சிக்கான தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது.
இதில் சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே உடன்பாடு எட்டாத நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
பாஜக பதவி
மொத்தமுள்ள 60 இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியை பெற 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், சிவசேனா 27 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜக 14, காங்கிரஸ் 12, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேட்டைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து சிவசேனா தரப்பில் மனிஷா வாலேகரும், பாஜக தரப்பில் தேஜஸ்ரீ கரஞ்சுலேயும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில்,
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் தேஜஸ்ரீ கரஞ்சுலே நகராட்சி தலைவராகியுள்ளார்.