15 தொகுதிகளில் நேருக்கு நேர் களம் காணும் அதிமுக - காங்கிரஸ்

india tamilnadu bjp congress
By Jon Mar 12, 2021 02:19 PM GMT
Report

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில், 15 இடங்களில் அதிமுகவை எதிர்த்து களமிறங்குகிறது. பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, வேளச்சேரி ஆகிய 15 தொகுதிகளில் அதிமுகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதுகிறது.

அதே போன்று உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, குளச்சல், விளவங்கோடு ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரசும், பாஜகவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.