காங்கிரஸுடன் நேருக்கு நேர் மோதும் தமாகா வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா கட்சி காங்கிரஸ் கட்சியோடு 2 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதவுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
எனினும் அதற்கு அதிமுக முன்வராததால் பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியில் தமாகாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து அதிமுக - தமாகா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் தமாகா திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து 6 முக்கிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து 2 தொகுதிகளிலும்,திமுகவை எதிர்த்து 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
அதன்படி பட்டுக்கோட்டை (176) - N.R. ரங்கராஜன், தூத்துக்குடி (214) - S.D.R. விஜயசீலன்,கிள்ளியூர் (234) - K.V. ஜூட் தேவ்,திரு.வி.க. நகர் (தனி) (15) - திருமதி. P.L. கல்யாணி,ஈரோடு (கிழக்கு) (98) - M. யுவராஜா,லால்குடி (143) - D.R. தர்மராஜ்.