அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் - ரஜினிகாந்த் ட்வீட்
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இனி மாண்புமிகு உதயநிதி
ஆளுநர் மாளிகையில் இன்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் அமைச்சர் பதவியை இன்று முறைப்படி ஏற்றுக் கொண்டார் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இதையடுத்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள்
இந்த நிலையில் தலைமைச் செயலகம் சென்ற உதயநிதி தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறைக்கு சென்றார் அங்கு அவரை துரைதுமுருகன் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் இருக்கையில் அமர வைத்தனர்.
அவர் தனது துறையின் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.@Udhaystalin
— Rajinikanth (@rajinikanth) December 14, 2022