3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!
ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது.
ராணுவத்திற்கும் கிளர்ச்சிப்படைக்கும் இடையே நடந்த மோதலில் இறுதியாக கோமா நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இந்த சமயத்தை பயன்படுத்தி கோமா நகரில் பெண்கள் மீது கொடூர தாக்கதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுவரை சுமார் 3000 க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்தும் கொடூரமான முறையிலும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கோமா தெருக்களில் இருந்து இதுவரை 2,000 உடல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
உயிரோடு எரித்து கொலை
900 உடல்கள் கோமா மருத்துவமனைகளின் பிணவறைகளில் உள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் அழுகிய நிலையில் இன்னும் பல உடல்கள் இருப்பதாக ஐ.நா. தூதரகத்தின் துணைத் தலைவர் விவியன் வான் டி பெர்ரே தெரிவித்துள்ளார்.
தற்போது தெருக்களில் சிதறிக் கிடக்கும் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் மற்றும் கனிம வளங்களை பெறுவது தொடர்பான இனப் பதட்டங்கள் மற்றும் சண்டைகளால் அந்நாடு பல ஆண்டுகளாக வன்முறையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.