மலை முழுவதும் தங்கம்.. படையெடுத்த ஊர்மக்கள்! காங்கோவில் நிகழ்ந்த் அதிசயம்
காங்கோ நாட்டின் தெற்கு கியூ மாகாணத்தில் உள்ள லூஹி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு மலை உள்ளது. அந்த மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அந்த மலைக்கு சென்று தோண்ட ஆரம்பித்தனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவத் தொடங்கியது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் மலைக்கு செல்ல படையெடுத்து வந்து தங்கத்தை வெட்டி அவரவர் விருப்பம் போல மலையை வெட்டி குடைந்து எடுத்துள்ளனர். கடப்பாரை, மண்வெட்டி என ஆயுதங்களை எடுத்து வந்த மக்கள், கையில் கிடைக்கும் கற்கள், மணல் என அனைத்தையும் முடிந்தவரை அள்ளி வீட்டுக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள்.
இத்தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் மக்களை அப்பகுதியிலுருந்து கலைத்து வெளியே அனுப்பினர். தங்க சுரங்கத்தை தோண்டுவதற்கு மக்களுக்கு தடை விதித்தனர். தற்போது அந்த மலை 60% முதல் 90% வரை தங்கத்தால் நிரம்பியிரப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்த மலையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் யாரும் மலைக்கு அருகில் வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்கத்தை எடுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டி எடுக்கும் மற்றும் தங்கத்தை பிரித்தெடுக்கும் வினோதமான வீடியோக்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.