காங்கோவில் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியவுடன் இடிந்து விழுந்த பாலம் - வைரல் வீடியோ
காங்கோவில் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியவுடன் இடிந்து விழுந்த பாலத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
காங்கோவில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, அந்நாட்டு ஜனநாயகக் குடியரசில் அதிகாரிகளால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. ரிப்பன் வெட்டியவுடன் திடீரென கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த பாலத்தையே அந்த ரிப்பனில்தான் கட்டி வச்சிருப்பாங்க போல... வெட்டி விட்டதும் விழுந்திருச்சு.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

A bridge in Democratic Republic of Congo (DRC) collapsed as officials gathered to inaugurate it pic.twitter.com/L5SGcuIV3p
— Raja Adityan (@RajaAdityan) September 7, 2022
This is the moment a bridge collapsed whilst being opened by officials in the Democratic Republic of Congo ⤵️ pic.twitter.com/5ej5U9WC3V
— Al Jazeera English (@AJEnglish) September 6, 2022