டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் குளறுபடி - தேர்வர்கள் தவிப்பு
Government of Tamil Nadu
By Thahir
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ஒருங்கிணைந்த தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் சிக்கல் எழுந்துள்ளது.
குரூப் 2 தேர்வில் குளறுபடி
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு இன்று காலை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 186 மையங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் பல தேர்வு மையங்களில் தேர்வு இன்னும் தொடங்காத சூழல் உருவாகியுள்ளதால் தேர்வர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து தேர்வு நடத்தும் அதிகாரிகள் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.