வாக்கு சேகரிப்பின்போது அமமுக - அதிமுகவினரிடையே மோதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுகவினருக்கும் அமுமுக வினருக்கும் வாக்குவாதம் இருசக்கர வாகனம் எரிப்பு பதட்டமான சூழ்நிலை கோவில்பட்டி பரபரப்பு.
கோவில்பட்டியில் முன்னாள் அதிமுகவின் வார்டு செயலாளருமான ஆரோக்கியராஜ் அவரது மனைவி சுந்தரி முன்னாள் 13-வார்டு கவுன்சிலராக உள்ளார் இதற்கிடையில் மதியம் கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் 1வது தெருவில் இருவரும் வாக்கு சேகரித்தனர். இதனால் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைகலப்பும் நடந்துள்ளது பிறகு போலீசார் குவிக்கப்பட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர் அதற்கு அப்புறம் ஆரோக்கியராஜ் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடன் அண்ணா திமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு விரைந்து வந்து பார்வையிட்டனர் இதனை அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டனர் பின்னர் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் இதனால் கோவில்பட்டி பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.