தமிழகத்தை மிரட்டும் கொரோனா : திமுக எம்.பி., கனிமொழிக்கு கொரோனா
COVID-19
Smt M. K. Kanimozhi
DMK
By Irumporai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது , இதனால் பொதுமக்கள் முகக்கவசம் தனிமனித இடைவெளியினை கடைபிடிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது , அதே சமயம் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500 ஐ கடந்துள்ளது.
இந்த நிலையில் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் கனிமொழி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள்தாக தகவல் வெளியாகி உள்ளது.