ஓசி டிக்கெட் சர்ச்சை..காசு கொடுத்தும் டிக்கெட் வாங்கலாம் - போக்குவரத்து துறை
பெண்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அளிக்க நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை கூறியுள்ளது.
விலையில்லா டிக்கெட்
சாதாரண கட்டண பேருந்துகளில் விலையில்லா டிக்கெட் எடுத்து மகளிர் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் தினசரி பணிக்கு செல்லும் பெண்கள் லட்சக்கணக்கான பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கோவையில் மூதாட்டி ஒருவர் தனக்கு இலவச பயணம் வேண்டாம் என்றும்,
போக்குவரத்து துறை உத்தரவு
டிக்கெட் கொடுத்தால்தான் பயணிப்பேன் என்றும் பேருந்தில் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது.
இதையடுத்து, சாதாரண கட்டண பேருந்துகளில் காசு கொடுத்து டிக்கெட் பெற பெண்கள் விரும்பினால், அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.