மூஞ்சிய உடைச்சிடுவேன்... மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டனை மிரட்டிய நடத்துநர் சஸ்பெண்ட்

Government of Tamil Nadu Chennai Viral Video Madurai
By Thahir Apr 19, 2023 05:55 AM GMT
Report

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனை பஸ்சில் ஏற்ற அனுமதி மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டிய பேருந்து நடத்துனர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில்  ஏற முயன்ற கிரிக்கெட் கேப்டனை திட்டிய நடத்துனர் 

மதுரையைச் சேர்ந்தவர் சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) தேதி இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி கொண்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் ( பேருந்து எண் TN01 AN3213) பயணம் செய்வதற்காக ஏறியுள்ளார்.

conductor-suspended-for-threatening

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் 'மூஞ்சிய உடைச்சிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்' என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து கேட்டபோது, 'அப்படித்தான் பேசுவேன் உன்னை வண்டியில் ஏற்ற முடியாது' எனக்கூறி வண்டியில் ஏற்றுவதற்கு மறுத்துததாக கூறப்படுகிறது.

நடத்துனரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு 

இதனையடுத்து மாற்றுத்திறனாளி சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அதே பேருந்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

conductor-suspended-for-threatening

அதற்கு அந்த நடத்துனர், 'நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது" என அலட்சியமாக பேசி மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பேருந்து நடத்துநர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.