பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்; அசராமல் நடத்துனர் செய்த செயல் - viral video!
பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞரை நடத்துனர் காப்பாற்றியது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விழுந்த இளைஞர்
கேரளாவில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று கேரள மாநிலத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், தனியார் பேருந்து ஒன்று இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த பேருந்துக்குள் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துநரின் அருகில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் நின்றுள்ளார்.
பேருந்தில் ஏராளமான இருக்கைகள் காலியாக இருப்பினும் அவர் டிக்கெட் பெறுவதற்காக படியின் நுனியில் நின்று கொண்டு இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக இளைஞர் தடுமாறி பின்புற கதவு வழியாக கீழே விழப்போகிறார்.
பேருந்து ஓட்டையில் கீழே விழுந்த பெண் - ஊழலை குறித்து தான் சிந்தனை - பராமரிப்பிலும் வேண்டும் - அண்ணாமலை
பேருந்து நடத்துனர்
உடனே அவரது அருகில் நின்றிருந்த நடத்துநர் அந்த பயணியை பார்க்காமலேயே அவரது கையை பிடித்து பத்திரமாக அவரை மீண்டும் பேருந்துக்குள் இழுக்கிறார். இந்த சம்பவத்தால் கதவு திறந்ததையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் அருகில் இருக்கும் மற்றொருவர் அந்த கதவை சாத்திய பிறகு பேருந்து பயணிக்கிறது.
இந்த பதைபதைக்கும் காட்சிகள் பேருந்தின் பின் புற கதவு பகுதியில் அருகே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆகும். 19 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் அந்த நடத்துனரின் cool ஆன ரியாக்சனை ரசித்தும், அவரை ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் மின்னல் முரளி என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.