பஸ்ஸில் ஏறிய குடிகார ஆசாமியை வெளுத்து வாங்கிய கண்டெக்டர் - வைரலாகும் வீடியோ...!

Tamil nadu Viral Video
By Nandhini Oct 13, 2022 12:10 PM GMT
Report

பஸ்ஸில் ஏறிய குடிகார ஆசாமியை வெளுத்து வாங்கிய கண்டெக்டரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

குடிகார ஆசாமியை வெளுத்து வாங்கிய கண்டெக்டர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் என்ற இடத்தில் பேருந்தில் ஒரு மது போதை ஆசாமி ஏறியுள்ளார். பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால், நடத்துனருக்கும், மது ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அப்போது, திடீரென மது ஆசாமி நடத்துனரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த நடத்துனர் மது ஆசாமியை திருப்பி தாக்கினார்.

இருவரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

conductor-drinker-fight-namakkal-viral-video